2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருதயசிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தையும் இருதய கூட்டுத் தொகுதிக்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ் தெரிவித்தார்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசப் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, வைத்தியசாலையின் தேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர் விடுதிகள், நரம்பியல் தொகுதி, சிறுநீரகம் சம்பந்தமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் விபத்துச் சேவைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் தேவைகள் குறித்து கடிதமொன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசபிக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவிததார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .