2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அயல் வீட்டுப் பெண்ணை தகாத வர்த்தைகளால் ஏசியவருக்கு சிறை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

அயல் வீட்டு இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் ஏசி அந்தப் பெண்ணுக்கு மன விரக்தியை எற்படுத்திய நபருக்கு 2500 அபராதமும் ஒருவார கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்துள்ளார்.

யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூட் விஜயன் (வயது 40) என்பவர், அயல்வீட்டுப் பெண்ணை தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன் அப்பெண்ணை இன்னொரு ஆடவருடன் தொடர்புபடுத்தி பேசியதால் மனம் உடைந்த பெண் தனது சட்டத்தரணி மூலம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பிரகாரம் அவருக்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .