2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளை மூவர் கைது

Super User   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். அரியாலை மாம்பழ சந்தியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

தொலைபேசி விற்பனை நிலையத்தில் 16 தொலைபேசி, இரண்டு சீடி பிளேயர், இரண்டு கமரா என்பவற்றை கொள்ளையடித்து விட்டு இவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.

எனினும், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளின் மூலம் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் தலைமறைவாகியிருப்பதாகவும் அதில் ஒருவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை செவ்வாய்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் தலமையக பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X