2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற ஜனநாயக ரீதியில் போராடுவோம்: மாவை

Super User   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்

யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கில் இராணுவம் வெளியேறினால் தான் தமிழ் மக்களால் நிம்மதியாக வாழ முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்க் கட்சிகளின் மே தினத்தை ஏற்பாடு செய்துள்ளது

தமிழ் தேசியக் கூட்டமப்பின் மே தின அறைகூவல் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதேயாகும். வடக்கில் இராணுவம் நிரந்தரமாக இருக்கலாம் என கனவு காண முடியாது.

எமது மண்ணில் நாங்கள் நிம்மதியாக உரிமையுடன் வாழ விரும்புகின்றோம். அதற்காக நாம் எமது மக்கள் சார்ந்த போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம்" என்றார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

"யாழில் மே தினத்தை நடத்தி எமது உரிமையை நிலைநாட்டவுள்ளோம். எங்களை இந்த அரசு தொடர்ந்தும் எமது உரிமைகளை புறக்கணித்து வந்தால் எமது மக்கள் சார்ந்த போராட்டம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிரப்படுத்தப்படும்" என்றார்



You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 10 April 2012 03:51 AM

    ஆயுத போராட்டம் முற்று பெற சாத்வீக போராட்டம், பேரினவாதிகள் மீண்டும் புலி கிலியை உருவாக்கி பயங்கரவாத சாயம் பூசுவரோ?

    Reply : 0       0

    அமிர்தன் Tuesday, 10 April 2012 03:52 AM

    ஜயா- ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து மே தினத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லையே ஏன் உங்களுக்கு தனித்து நடத்த சக்தி இல்லையோ?
    ஜயா- ஐக்கியதேசிய கட்சி இராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து எடுக்க சம்மதிக்குமா? அந்த கட்சிதானே 1983 இல் யுத்தத்தை தொடங்கியது அந்த கட்சிதானே சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தது. அததையெல்லாம் மறந்து இப்ப கூட்டணியோ? கொஞ்சம் யோசியுங்கள்.

    Reply : 0       0

    Manithan Tuesday, 10 April 2012 07:32 AM

    அய்யா நீங்க சொல்லுறத பார்த்தா வட கிழக்கில் இருந்து இராணுவத்தினை விரட்டி விட்டு LTTE இணை திரும்பவும் உருவாக்கதானா? என்ன அய்யா நீங்க அரசியலில் எவ்வளவோ பழுத்த நீங்க மகிந்த அய்யா, அவர்ட தம்பி பசில் அய்யா, அவங்கட தம்பி கோதபாய அய்யா இவங்களெல்லாம் உங்கட ஐடியாவ கேப்பினம் ஏன்டா நினைக்கிறீங்க - உங்க அரசியலுக்காக நமது மக்களை இன்னும் மடையர்கள் எண்டு நினைக்காதிங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .