2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருமணத்துக்கு சென்ற மோட்டார் சைக்கிள் விபத்து;ஒருவர் பலி;மற்றொருவர் காயம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை, அரசகேணி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமண வைபவமொன்றுக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில், அரசகேணி பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகியுள்ள மேற்படி மோட்டார் சைக்கிள், சுமார் 200 மீற்றர் வரை இழுபட்டுச் சென்று சேற்றுக்குழியொன்றுக்குள் விழுந்துள்ளது.

இதன்போது உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜசிங்கம் ஜெயராஜ் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .