2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன் பிடியால் வடமராட்சி கடற்றொழிலாளர் பாதிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி வடமராட்சி கடற் பகுதியில் அதிகரித்துள்ளதாக வடமாராட்சி கடற்றொழில் சங்கத்தின் தலைவர் அருள் தாஸ் தெரிவித்தார்.

யாழ். கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி விடயம் தொடர்பாக கடற்றொழில் சமாசத்தில் முறையிட்டுள்ளார்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையின் காரணமாக வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால்  குறித்த பிரச்சினையில் வட மாகாண கடற்றொழிலாளர் சமசம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிடடார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக வட மாகாண கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்திய செல்லவுள்ளதாக வட மாகாண கடற்றொழிலாளர் சமாசம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .