2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இரு சகோதரிகளின் சடலங்கள் மீட்பு; தற்கொலை செய்துள்ளதாக தகவல்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றிலிருந்து சகோதரிகள் இருவரின் சடலங்களை பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவருடைய சடலத்தையும் கிணற்றிலிருந்து மற்றொருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

சங்கரபிள்ளை சுவர்ணலதா (வயது 42) மற்றும் சங்கரபிள்ளை கீதாஞ்சலி (வயது 39) என்ற இரு சகோதரிகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த தற்கொலைகளுக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புத்தாண்டை முன்னிட்டு குறித்த சகோதரிகளின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இரவரும் நேற்று இரவு தனிமையிலேயே வீட்டில் இருந்த நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிவானின் மரண விசாரணைகளை அடுத்து அவ்விருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .