2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கரையோரப் பகுதியிலுள்ள இறங்குதுறைகள் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.குடாநாட்டில் கரையோரப் பகுதியிலுள்ள இறங்குதுறைகள் புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியலவளத்துறைத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.பிராந்திய நீரியல்வளத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ்.மாதகல் செந்தாங்குளப்பகுதியில் 14 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை ஒன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, 50 மில்லியன் ரூபா செலவில் பாஷையூரில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதுடன் குருநகர், காக்கைதீவு பகுதிகளில் ஜப்பானிய நிறுவனமான ஜெய்க்கா நிறுவனம் இறங்குதுறையைப் புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.குடாக்கடல் கடற்றொழிலாளர்களுக்கு முதலாம் கட்ட எரிபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1700 கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை முதல் இரண்டாம் கட்ட எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .