2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.ஊர்காவற்துறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். ஊர்காவற்துறை கரம்பன் மேற்குப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் சிவரூபராணி என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டின் அருகில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஜெ. 54 கிராம சேவையாளருக்கு தவகல் வழங்கியுள்ளனர்.
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .