2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை

Super User   / 2012 ஏப்ரல் 18 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் யாழ் மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளிகளுக்கு பணம் திரட்டினார் மற்றும் புலிகளிடம் நவீனரக ஆயுத பயிற்சி பெற்றார் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சொர்ணலிங்கம் ஜெயராச கடந்த 2009 மே 16 ஆம் திகதி முள்ளிவாக்கலில் வைத்து  விசேட இராணுவப் படையணியால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தார்.

குறித்த நபர் மீதான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவருக்கு எதிராக இருந்த ஒரே ஒரு சான்று இவரிடம் பெற்றப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இது சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பெறப்படவில்லை என்பதுடன் இவர் புலிகளினால் ஆயுதப்பயிற்சி மற்றும் இயக்கத்திற்கு பணம் திரட்டினார் என்பது நியாய பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி குறித்த நபரை மேல் நீதிமன்ற நீதிவன் ஜே.விஸ்வநாதன் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தார்

இதேவேளை, கதிரேசன் வீதி கொழும்பு 13 என்ற இடத்தில் வைத்து சிவராசா வினேத் என்ற இளைஞன் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்ற சந்தேகத்தின் கீழ் 02.07.2009 ஆம் திகதி கொழும்பில் வைத்து விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த இளைஞனுக்கு எதிரான வழக்கும் இன்று புதன்கிழமை யாழ்.மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படதமையினால் அவருக்கு எதிரான வேறு சான்றுகள் இல்லை என அரச சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்ததை அடுத்து அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரின் சார்பில் சட்டத்தரணி மு. றெமிடியஸ் ஆஜராகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .