2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சைவ அறநெறி ஒருங்கிணைப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை கோரல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சிவத்தமிழ் மானிட விடியற்கழகம் வடக்கு கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் ஆலயம் சார்ந்த சமூகப் பணிகளை மேற்க்கொள்வதற்க்கும் அறநெறிப் பாடசாலைகளை இயக்கும் முகமாகவும் சைவத்திமிழ் மக்களிடம் இருந்து சைவ அறநெறி ஒருங்கணைப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்போர்கள் க.பொ.த.சாதாரணத்தில் சித்தி அடைந்திருப்பதுடன் 18 - 40 வயதிற்க்கும் இடைப்பட்டவர்களாக இருக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆண், பெண்  இருபாலாரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
கடந்த காலத்தில் சமூக சமய அமைப்புக்களில் கடமையாற்றியிருந்தால் அது மேலதிக தகமைகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக சிவத்தமிழ் அறநெறி மையம், சித்திவிநாயகர் கோயில் வீதி, கண்டி வீதி, கிளிநொச்சி என்ற முகவரிக்கு அனுப்பும் படி கோரப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 077-0711152 என்னும் இலக்கத்தடுன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .