2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். கடற்றொழிலாளர் சங்கம் இந்தியப் பிரதமருக்கு மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கையளிப்பதற்கான மகஜரொன்றை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஊடாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம் இன்று கையளித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இன்று வியாழக்கிழமை சந்தித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், இக்குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜிடம் இம்மகஜரைக் கையளித்துள்ளனர். 

இம்மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர்  ஜெயலலிதா ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .