2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கூரைத் தகடுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வலி. வடக்கு தெல்லிப்பிளை பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியேறிய மக்களுக்கு தெல்லிப்பளை பொலிஸாரினால் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான கூரைத்தகடுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
21 குடும்பங்களுக்க வழங்கப்பட்டுளளன.

தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.வீரசிங்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்னா, காங்கேசன்துறை பொலிஸ் உதவி அத்தியட்சகர், கமகே உட்பட பொலிஸ் அதிகாரிகள், தெல்லிப்பளை பிரதெச செயலாளர் எஸ்.ஸ்ரீமோகன் உட்பட பொது அமைப்பக்களின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டார்கள்.

இதன்போது, 21 குடும்பங்களுக்கும் தலா 15 கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
கோணப்புலம் பிரதேசத்தைச்சேர்ந்த 11 குடும்பங்களுக்கும் தந்தை செல்வா புலத்தைச்சேர்ந்த 10 குடும்பங்களுக்கும் இந்தக் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .