2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'யாழ்ப்பாணத்தில் ஆட்சி செலுத்தும் எண்ணம் இராணுவத்திற்கு இல்லை'

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கே இராணுவத்தினர் இருக்கின்றார்கள். இங்கிருந்து ஆட்சி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இராணுவத்தினருக்கு இல்லை என யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட ஏழாலையை சேர்ந்த கிருஸ்ணகுமார் கஜேந்தினிக்கு யாழ். மாவட்ட இராணுவ தலைமையத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இருதய சத்திர சிகிச்சை நடைபெற்றது.

அதன் பின்னர் அவரை யாழ்ப்பாணத்திற்கு வரவேற்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்கள் தொடர்பு சிவில் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"நான் யாழ் மாவட்டத்தின் இராணுவ தளபதியாக 2009 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுகும் போது 27.000 பேர் இருந்தனர். ஆனால் இன்று இந்த தொகை குறைக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தற்போது 16,000 இராணுவத்தினர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும் நாங்கள் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இங்கிருந்து ஆட்சி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. நாங்கள் மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு வாழ்வாதார உதவிகள் மற்றும் வாழ்விடங்கள் என பல்வேறு சேவைகளை இராணுவத்தினர் செய்துவருகின்றனர்" என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .