2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணியும் கண்காட்சியும்

Menaka Mookandi   / 2012 மே 11 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் சர்வதேச மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் விழிப்புணர்வூட்டும் நடைபவனியும் கண்காட்சியும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் யாழ்.மாநாகர ஆணையாளர் ச.சரவணபவன் மற்றும் யாழ்.பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மலேரியா விழிப்புணர்வு நடைபவனி யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. நடைபவனி ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி ஊடாக யாழ் இந்துக் கல்லூரி கண்காட்சி மண்டபத்தை சென்றடைந்தது.

சேவா லங்கா, சர்வோதயம் ஆகிய பொது நிறுவனங்களின் அனுசரனையுடன் யாழ் பிராந்திய மலேரியா தடுப்பு இயகத்தினால் விழிப்புணர்வு ஊர்வலமும் கண்காட்சியும் ஒழுங்கு செய்திருந்தன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X