2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரச, அரச சார்பற்ற ஊழியர்களுக்கு யாழில் பஸ்சேவை

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 750 மார்க்கமாக பயணிக்கும் அரச, அரச சார்பற்ற ஊழியர்களுக்கு போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகண பிரதான பிராந்திய முகாமையாளர் செய்னுள் ஆப்தீன் அஸ்ஹர் தெரிவித்தார்.

நாளை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கும் இச்சேவை காலை 7 மணிக்கு பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு யாழ். மாவட்டசெயலகம் ஊடாக யாழ். பேரூந்து நிலையத்தை காலை 8.30 மணிக்கு சென்றடையவுள்ளது.

அதேவேளை மாலை 4.15 மணிக்கு யாழ். பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு யாழ் . மாவட்ட செயலகம் (கச்சேரி) ஊடாக 5.30 மணிக்கு பருத்தித்துறை பேரூந்து நிலையத்தை சென்றடையும்.

இதில் அரச , அரச சார்பற்ற மற்றும் நிறுவன ஊழியர்கள் மத்திரம் பயணம் செய்ய முடியும். அதேவேளை இச்சேவையை ஆரம்பிப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் செய்னுள் ஆப்தீன் அஸ்ஹர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X