2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்காலை நினைவு கூரும் சுவரொட்டிகள்

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள், முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தை நினைவு கூரும் வகையில் சுவரொட்டிகள் நேற்று திங்கட்கிழமை இரவு பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில் 'வலிகள் தந்த வாரம்' எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

'முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல', 'வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்', 'உரிமைக்காய் குரல் கொடுப்போம்', 'நீதிக்காய் போராடுவோம்', 'உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை',
'தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்'  என அவற்றில் எழுதப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் என்ற அடிக்குறிப்புடன் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X