2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை மாணவன் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்பாட்டம்

Super User   / 2012 மே 18 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,கிரிசன்)

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலளார் இனந்தெரியாத நபர்களினால் இன்று வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டமையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தினால் பல்கலைக்கழக உப வேந்தரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டதுடன் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்து, மாணவர்களில் கை வைக்கப்படுமானால் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் உள்ளிட்ட பல கோசங்கைள இந்த ஆர்பாட்டத்தில் எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தை அடுத்து யாழ். பொலிஸார் பல்கலைக்கழகத்தின் வெளிப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X