2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வடக்கில் துரித மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


வடக்கில் துரிதமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி தலைமையிலான குழுவினருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையிலான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ். குடாநாட்டில் வாழ்வாதார நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் மாவட்ட அபிவிருத்தியில் மக்களை இணைத்து வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்துமாறும் தம்மிடம்  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்  கேட்டுக்கொண்டதாக யாழ். அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். 

அத்துடன்,  யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும்; மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் அவர்களுக்கு தான் விளக்கமளித்ததுடன், அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகளை தங்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டின் உட்கட்டுமான வசதிகளுக்கு தங்களான பங்களிப்பை வழங்குவதற்கு எண்ணியுள்ளதாகவும் முற்றுமுழுதாக அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்  றொபின் மூடி தலைமையிலான குழுவினர் கூறியதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்;; சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X