2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் விசேட தேவையுடையவர்களுக்கு வீட்டுத்திட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 07 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு 250,000 ரூபா பெறுமதியான வீடுகளை வழங்குவதற்காக நாளை வெள்ளிக்கிழமை சமூக சேவைகள் அமைச்சர் பீரிக்ஸ் பெரேரா யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நாளை காலை சமூத்தி நிவாரணங்கள் பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா வருகை தரவுள்ளார். அமைச்சினால் மாற்று வலுவிழந்தவர்களுக்கான உதவிக் கொடுப்பணவுகளும் வழங்கப்படவுள்ளது.

யாழில் முதியவர்களின் ஏழ்மை நிலையினைக் கருத்தில் கொண்டு பல செயற்திட்டங்கள் சமூக சேவைகள் அமைச்சினுடாக முனனெடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X