2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழில் மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு தொடர்பான பிரச்சினையை பிரதேச செயலாளர்கள் எவ்விதம் கையாள வேண்டும் என்பது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

அத்தோடு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் மற்றும் மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்குகின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மீளக்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம், குடிநீர், மின்சாரம், சுகாதார சேவைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் யாழ்.மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாண பிரதேச செயலர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X