2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மிற்சுபிசி நிறுவன அனுசரணையுடன் யாழ். வைத்தியசாலைக்கு லிப்ட் வசதி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். போதனா வைத்தியசாலைக்கு மிற்சுபிசி நிறுவனத்தினால் லிப்ட் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை மின்சாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பவானி பசுபதிராஜா தெரிவித்தார்

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்; சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு லிப்ட் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை மின்சார சபையுடன் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 24ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு லிப்ட் வேலைத்திட்டம் தொடர்பாக பார்வையிடுவதற்கு மிற்சுபிசி நிறுவனம் வருகை தரவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கு லிப்டைப்; பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X