2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பளையில் பொலிஸ் நடமாடும்சேவை

Kogilavani   / 2012 ஜூன் 24 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

தெல்லிப்பளை பொலிஸாரின் ஏற்பாட்டில் பொலிஸ் நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை மல்லாகம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையை காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், வலி வடக்குப் பிரதேச சபை தவிசாளா சோ.சுகிர்தன், சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார், தெல்லிப்பளை பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் சாந்தமோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நடமாடும்சேவையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, ஆயுள்வேத வைத்தியசாலை, பொலிஸ் மருத்துவப் பிரிவு ஆகியவற்றினால் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டதுடன் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் சிறுகுற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று முறைப்பாடுகள் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X