2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழ் மருத்துவர்கள் சங்கத்தின் பகிஷ்கரிப்புக்கு நீதிமன்றம் தடை

Super User   / 2012 ஜூலை 05 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (ஜே.டானியல்)

யாழ் மருத்துவர்கள் சங்கம் நாளை வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்படி பகிஷ்கரிப்பை நிறுத்துமாறு பொலிஸார் தாக்கல் செய்த மனுவையடுத்து நீதவான் ம.கணேசராசா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நோயாளர்கள் மற்றும் விபத்தில் காயமடைபவர்கள் பாதிக்கப்படலாம் என்பதாலும் இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் என தான் கருதுவதாலும் இந்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி  சமன் சிகேரா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து மேற்படி உத்தரவை பிறப்பித்த யாழ். நீதவான் ம.கணேசராசா, தேவையேற்படின் பலத்தை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறும்  பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X