2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வன்னி ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

வன்னி ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சமூகமளிக்காத காரணத்தினாலும் முடிவுகள் எட்டப்படாத நிலையிலும்.  விசாரணை ஓகஸ்ட் 2ஆம் திகதிக்கு ஒத்திகை;கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் இன்று விசாரணைக்கு சமூகம் அளிக்கவில்லை.

அவர்களுக்கு பதிலாக நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் இ.ஜே.லெஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்மந்தப்பட்டவாகள் சமூகமளிக்காத காரணத்தினால் சம்பந்தப்பட்டவர்களை அடுத்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தெரிவித்தே விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X