2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அமெரிக்கா துணை நிற்க வேண்டும்: சிறிதரன் எம்.பி.

Super User   / 2012 ஜூலை 24 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அமெரிக்கா துணை நிற்க வேணடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டேனிஸிடம் கேட்டுக்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொணடு அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டேனிஸை கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல் குறித்து சிறிதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

சிறைக்கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் குறித்தும், அவர்களது குடும்பங்களின் நிலை குறித்தும் எடுத்து கூறியுள்ளேன்" என்றார்.

இந்த விடயங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்த அவர், தமிழர்கள் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் அமெரிக்க தூதுவர் பற்றிசியா கேட்டறிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X