2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழில் றெக்சின் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று வியாழக்கிழமை பரவிய தீ காரணமாக அந்த வியாபார நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  றெக்சின் விற்பனை நிலையம் ஒன்றிலேயே தீ பரவியதாகவும் இதன் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த வியாபார நிலையத்தின் மேற்தளத்தில்  இருந்த களஞ்சியசாலையிலேயே  திடீர் என தீப்பற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இது தொடர்பில் யாழ். மாநகரசபையின் தீ அணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இன்றையதினம் இந்தப் பகுதியில் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில்,  தீ பரவியதற்கான காரணம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X