2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமெரிக்க இராஜாங்க குழுவினர் பலாலி இடம்பெயர் மக்களுடன் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க குழுவினர், பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்தனர். இந்த சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கடந்த 22 வருடங்களுக்கு மேலாக நலன்புரி நிலையங்களிலும் முகாம்களிலும் வாழும் இப்பகுதி மக்கள், தமது சொந்த இடங்களில் தம்மை குடியமர்த்துமாறு அமெரிக்க இராஜாங்க குழுவினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும் தெல்லிப்பளை பிரதேசத்தில் தற்போது மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார தேவைகள் மற்றும் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் குறித்தும் மேற்படி குழுவினர் தகவல்களைத் திரட்டியுள்ளனர்.

அமெரிக்க செயற்திட்ட பிரதித் தலைவர் வில்லியம்ஸ் வேய்ன்ரன்ஸ், அமெரிக்க அரசியல் ஆலோசகர் மைக்கல் கொனின்ஸ்ரஜன் மற்றும் ஜேம்ஸ் எப் பெட்னர் ஆகியோர் சேவாலங்கா பணியாளர்களுடன் சுன்னாகம் கண்ணகி நலன்புரி நிலையம் மற்றும் சபாபதி நலன்புரி நிலையம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X