2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குருநகரில் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டன

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த 525 கடலட்டைகளை யாழ். நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.

யாழ். குருநகர் மற்றும் ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மூவர், மேற்படி கடலட்டைகளை தங்கள் வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ். நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டது. கடலட்டைகளை நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X