2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர்கள் கோவிலுக்குச்சென்ற வேளை தனிமையில் இருந்த குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துகொண்டவர் என்பதும் இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம், வேலணை நான்காம் வட்டாரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

துர்ராஜா கமலாதேவி என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆவார். இவரது மரணம் தெடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரு பெண்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X