2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வேம்படி கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இன்று புதன்கிழமை பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடத்தியது.

பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அதிபரிடம் பொறுப்புக்களை கையளி, கல்வி அதிகாரிகளே ஏன் இந்த அலட்சியம் போன்ற வாசகம் அடங்கி சுலோகங்களை கைகளில் ஏந்தியவாறு இன்று காலை 8.00 மணிக்கு யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை முன்பாக ஒன்று கூடிய மேற்படி பழைய மாணவர் சங்கத்தினர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

பாடசாலை நிர்வாகத்தினரிடையே காணப்படும் குழப்பநிலைகளினால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் நிலையை உருவாக்குவதற்காக புதிய அதிபரை கடமை செய்ய விடாமல் ஒதுக்குவது நியாயமற்ற செயல் எனவும், கல்வி திணைக்களம் மற்றும் கல்வி புல அதிகாரிகள் குழப்பநிலையை போக்கி மாணவிகளின் சீரான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சுமூக நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் நிரந்தர அதிபர் நியமனம் தொடர்பான ஞாபகமுட்டல் மகஜர் ஒன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆனந்தகுமாரசாமி மற்றும் உறுப்பினர்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை இன்று புதன்கிழமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜரையும் கைளித்தனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 31 மே 2012 ஆம் திகதி முதல்  ஜு10ன்  11 வரையான காலப்பகுதி வழங்கப்பட்ட போதிலும், மேலதிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜினி முத்துக்குமாரன் பதவி விலகவில்லை. வடமாகாண கல்வி அமைச்சு கல்வி திணைக்களம் ஆகியன எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

அதனால், பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையில் ஏற்படும் குழப்பநிலைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மகஜரில் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X