2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பூநகரிப் பகுதியில் ரிஎன்ரி வெடி பொருட்களுடன் இருவர் கைது

Kogilavani   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் ரிஎன்ரி வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வாகனம் ஒன்றில் ரிஎன்ரி வெடி பொருட்களைக் கொண்டு சென்ற யாழ்ப்பாணம் குருநகரைச் சேந்த இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவமானது கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை கனகராயன் குளம் நெடுங்கேணிப் பகுதியில் ரி 56 துப்பாக்கி ஒன்றும் அத்துப்பாக்கிக்கான 90 ரவைகள் , கிளைமோர் குண்டு ஒன்று என்பன காட்டுப் பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்  மாங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து தேடுதல் வேட்டையின் போது இராணுவத்தினரால் 6 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X