2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கமநலச்சேவை நிலையம் அழிவடைந்துள்ளதால் விவசாயிகளுக்கான சேவை பாதிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


முல்லைத்தீவு உடையாக்ர்கட்டு பிரதேசத்தில் உள்ள கமநலச்சேவை நிலையம் யுத்தம் காரணமாக அழிவடைந்துள்ளதால் விவசாயிகளுக்கான சேவையை வழங்குவதில் பாரரி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக உடையார்கட்டு கமநல அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.

2011ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்றிலிருந்து கமலநலச்சேவை நிலையத்தின் ஊடாக கிடைக்கின்ற நன்மைகள் எமது விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக உடையார்கட்டு பெரும்பாக உத்தியோகஸ்தர் திருமதி கனியூட் பத்திமாநாயகியிடம் கேட்டபோது,
யுத்தம் காரணமாக கமநலச்சேவை நிலையம் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் இதனால் விசாசாயிகளுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் குறைவாக இருப்பதாகவும் தற்போது கமநலச்சேவை நிலையத்தின் ஒரு அறை மட்டும் திருத்தப்பட்டு அதனுள் நான்கு உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றிவருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கட்டிடத்தினை புனரமைத்து தருமாறு கமலச் சேவைத் திணைக்களம் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் தெரிவித்தபோதும் இது தொடர்பாக அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X