2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அரசாங்கத்திற்கு விரோதமாக செயற்படுவதற்காக லலித்குமார் யாழ்ப்பாணம் வரவில்லை: தந்தை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

அரசாங்கத்திற்கு விரோதமாக செயற்படுவதற்காக எனது மகன் யாழ்ப்பாணம் வரவில்லை.  மக்களுக்கு உதவி செய்வதற்காகவே அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்தார் என காணாமல் போனதாகக் கூறப்படும் லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராசா தெரிவித்துள்ளார்.

லலித், குகன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பான வழக்கு  இன்று  புதன்கிழமை யாழ்.  நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.

இதன் பின் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்து  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடத்தப்பட்டு காணாமல் போவதற்கு முன்னர், தான் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அங்கு மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது கட்சி அழைத்திருப்பதாகவும் எனது மகன் கூறியிருந்தார். அரசாங்கத்திற்கு விரோதமான செயற்பாடுகளுக்காக தான் அங்கு போகவில்லை என அவர் என்னிடம் தெரிவித்துவிட்டே இங்கு வந்தார்.

மக்களுக்கு சேவையாற்ற வந்த எனது மகன்  மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு  9 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் அவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை. 4 சகோதரிகளுடன் பிறந்த எனது மகன் பற்றிய தகவல்கள் இன்னும் 2 நாட்களுக்குள் கிடைக்குமென நான் நம்புகின்றேன்' என அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X