2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தேசிய மாணவர் படையணியின் மேலைத்தேய பாண்ட் வாத்திய பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                        (சுமித்தி, எஸ்.கே.பிரசாத்)


தேசிய மாணவர் படையணியின் மேலைத்தேய பாண்ட் வாத்திய பயிற்சி பட்டறை இன்று யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
தேசிய மாணவர் படையணியின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தலைமையில் ஆரம்பமான இப்பயிற்சி பட்டறையில் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களிடையே தலைமைத்துவத்தினையையும், ஒழுக்கத்தினையும், சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய மாணவர் படையணி கடந்த 1881 ஆம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர், தேசிய மாணவர் படையணி 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய அணியாக விளங்குகின்றது.

இந்த படையணியில் 22 படைப்பிரிவுகள் செயற்படுகின்றன. இதில் பொலிஸ் படையணி, விமானப் படையணி, கடற்படையணி உட்பட பல்வேறுப்பட்ட படையணிகள் உள்ளன.

தேசிய மாணவர் படையணியில் 14 வயது முதல் 20 வயது வரையான பாடசாலை மாணவர்கள் இணைக்கப்பட்டு அறிவு, ஆற்றல், திறமை போன்ற விடயங்களின் ஊடாக தமது ஆளுமையை விருத்தி செய்வதற்காகவும் மேலைத்தேய பாண்ட் இசை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இன்றைய ஆரம்ப நாள்நிகழ்வில், மாணவர்களின் பாண்ட் இசை, அணி வகுப்பு மரியாதையுடன் தேசிய கொடி மற்றும் தேசிய மாணவர் படையணி கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்ததுடன் ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களின் பாண்ட் இசை அணிவகுப்பு மற்றும் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மேலதிக உடற்கல்வி பணி;ப்பாளர் சத்தியபாலன், தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் எஸ்.எம்.ஜி சமரகோன், தேசிய மாணவர் படையணியின் 20வது படைப்பிரிவின் அதிகாரி எச்.எம்.எச் பலப்பிட்டிய மற்றும் யாழ். பரியோவான் கல்லூரியின் அதிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X