2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளுக்காக யாழின் சில பகுதிகளில் மின்தடை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                             (எஸ்.கே.பிரசாத்)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின்மார்க்கங்களை இணைக்கவேண்டியுள்ளதாலும் ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படுமென யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், நாளை னிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, விஞ்ஞான பீட, மருத்துவ பீடப் பிரதேசங்கள், பலாலி வீதி, கந்தர்மடம், வைமன் வீதி, முலவை, கச்சேரியடிப் பிரதேசம், நல்லூர், கோவில் வீதி, றக்கா வீதி, 1ம்,2ம்,3ம் குறுக்கு வீதிகள், மாட்டின் வீதி, ஸ்ரேசன் வீதி, கச்சேரி நல்லூர் வீதி, வளம்புரம், பாண்டியன்தாழ்வு, ஈச்சமோட்டை, பழைய பூங்கா வீதி, இராசாவின் தோட்டம், நாவலர் வீதி, ஸ்ரான்லி வீதி, கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், பிரதான வீதி, கொன்வன் பிரதேசம், பண்ணைப் பிரதேசம், நாகர்கோவில் முதல் புதுக்காடு வரையான மருதங்கேணி, நாகர்கோவில் பிரதேசங்கள், சுன்னாகம், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, ஆகிய இடங்களிலும்

நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், யாழ்.மாநகரசபைப் பகுதி, யாழ்.பட்டணப்பகுதி ஸ்ரான்லி வீதி, கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், பிரதான வீதி, கொன்வன் பிரதேசம், பண்ணைப் பிரதேசம், நாவாந்துறை, மீனாட்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், பிரதான வீதி, கொன்வன் பிரதேசம், பண்ணைப் பிரதேசம், சுன்னாகம், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, குஞ்சர்கடை முதல் வல்லிபுரக் கோவில் வரையான கரணவாய் பிரதேசம், நெல்லியடிப் பிரதேசம், திக்கம், அல்வாய், பருத்தித்துறைப் பிரதேசம், கரவெட்டிப் பிரதேசம், துன்னாலை, கற்கோவளப் பிரதேசம் ஆகியன உள்ளடங்கலான வடமராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் திங்கட்கிழமை அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை, சாமியன் அரசடிப் பிரதேசம், சம்பந்தர் கடைப் பிரதேசம், யாக்கருப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

புதன்கிழமை அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், கரவெட்டி கிழக்கு, கரவெட்டி மத்தி, நெல்லியடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, சாமியன் அரசடிப் பிரதேசம், சம்பந்தர் கடைப் பிரதேசம், துன்னாலை, குடவத்தை பிரதேசம் ஆகிய இடங்களிலும்  வெள்ளிக்கிழமை அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை, சாமியன் அரசடிப் பிரதேசம், சம்மந்தர் கடைப் பிரதேசம், யாக்கருப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும் என்று யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X