2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

டெங்கை கட்டுப்படுத்த வலை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (எஸ்.கே.பிரசாத்)
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் நுளம்பவலைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், யாழ்.மாநகர சபைக்குட்பட்ட 450 பேருக்கு நாளை புதன்கிழமை நுளம்பு வலை வழங்கப்படவுள்ளது.

யாழில் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் மழை நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் டெங்கு நோயின் தாக்கம் தற்போது குடா நாட்டில் அதிகரித்துள்ளதால் இவற்றைக் கருத்தில் கொண்டு நுளம்பு வலைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநாகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X