2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நீர் இறைக்கும் பம்பிகளை திருடிய இருவருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற நீர் இறைக்கும் இயந்திரங்கள் களவு தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றினால் கட்டளையிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட உடுவில் மான்ஸ் வித்தியாலயம் புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயம் மற்றும் சுன்னாகம் மத்திய மருந்தகத்தில் இருந்தும் நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடியதுடன் வைத்தியசாலையில் இருந்த பால் பக்கற்றுக்களையும் திருடிச்சென்று இருந்தார்கள்.

இந்நிலையில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி நவாலி தெற்கு நெல்லியடிப் பகுதிகளைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைதுசெய்து விசாரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  களவாடப்பட்ட மூன்று நீர் இறைக்கும் இயந்திரங்களும் மீட்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X