2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அபிவிருத்திகளை பார்வையிட மட்டுமே வந்தேன்: சீன தூதுவர்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


'இலங்கையும் இந்தியாவும் நட்புறவு நாடுகள் என்பது சீனாவுக்கு தெரியும். இந்நிலையில், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளைப் பார்வையிடுவதற்காகவே இலங்கை வந்துள்ளேன்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் வூ ஜியங்கோ தெரிவித்தார்.

யாழ். பொது நூலகத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட சீன தூதுவர் அங்கு ஊடகவியலாளர்களுடன் இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்தியா யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது' என்றார்.

அதேவளை, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பியவேளை, 'நட்புறவு ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடினோம். இதை தவிர வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவில்லை' என்றார்.

'இலங்கையில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகளைப் போன்று சீன அரசாங்கமும் பல்வேறு அபிவிருத்திகளை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி குறித்து பார்வையிட வந்துள்ளேன்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பை அடுத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சீனத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X