2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். நகரில் பொலிஸ் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யாழ். பொலிஸ் நிலையமும் கொழும்பு கிரான்ட் சேர்கிள் லயன் கழகமும் இணைந்து யாழ். நகரில் மாபெரும் நடமாடும் சேவை ஒன்றினை இன்று சனிக்கிழமை நடாத்தினர்.

யாழ். ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

அதேவேளை, கொழும்பு கிரான்ட் சேர்கில் லயன்ஸ் கழகம் மற்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு குழுவினரும் இணைந்து வறிய குடும்பத்தினை சேர்ந்த வயோதிபர் ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைத்தனர்.

யாழ். 512 படைப்பிரின் இராணுவத்தினர் 50 பேர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கி வைத்தனர். அத்துடன், கண் பரிசோதனை மேற்கொண்டு 1000 கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,அடையாள அட்டைகள் சாரதி அனுமதிபத்திரம், சிறுகுற்ற விசாரணைகளும் பொதுமக்களுக்கான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில், சிரேஸ்ட பிரதிப் பொலிஸமா அதிபர் காமினி சில்வா, யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர, கொழும்பு கிரான்ட் சேர்கிள் லயன்ஸ் கழக தலைவர் பிரசாட் விக்கிரமரட்ன, கழக நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் பா.ரமேஷ், கழக பொருளாளர் ஆர். சுதாகரன், கழக இயக்குனர் தபுன ஆரியவத்தன உட்பட கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X