2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கேப்பாபிளவு மக்களுக்கு சூரிபுரத்தில் புதிய காணிகள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கேப்பாபிளவில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு சூரிபரத்தில் நிரந்தமாக வசிப்பதற்கான காணி உரிமம் இன்று சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட மக்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேப்பாபிளவில் உள்ள சூரிபுரம் என்ற கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் சூரிபுரத்தில் நிரந்தரமாக வசிப்பதற்கு அவர்கள் அனைவருக்கும் புதிய காணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  'கேப்பாபிளவு சூரிபுரத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 165 குடும்பங்களுகளின் காணிகளிற்கு மாற்றீடாக  நிரந்த காணி உரிமங்கள் வழங்கப்ட்டுள்ளதாக ஒவ்வொரு குடும்பத்திற்கும்
தலா நான்கு பரப்பு காணி வழங்கப்பட்டுள்ளதாகவும்' அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இங்கு மீள்குடியேறியுள்ள மக்களின் விவசாயத் தொழில் செய்யும் குடும்பங்களிற்கு விரைவில் விவசாய நிலம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதுவரை மீள்குடியேறாத மக்களிற்கும் காணி வழங்குவதற்கான நடவடி;கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X