2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பனம்பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்ப இயந்திரம் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

பனம் கழியை பிரித்தெடுக்கும் இயந்திரம் மற்றும் பனாட்டு பதனிடும் இயந்தரிம் ஆகியன, பனை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் கீழ், பனை ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய இயந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையமும் இணைந்து பனம் கழியினை பிரித்தெடுக்கும் இயந்திரத்தினை தயாரித்துள்ளன.

கைத்தொழில் ரீதியாக பயன்படுத்த குறித்த இயந்திரம் இன்று பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினத்திடம் தேசிய இயந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன ஆராய்ச்சி நிபுணர் மாலினி ரணதுங்க வழங்கி வைத்தார்.

சுமார் 150 பனம் பழத்தினை குறித்த இயந்திரத்தில் போட்டு 100 லீற்றர் பனம் பானத்திற்கு மேல் பெற்றுக் கொள்ள முடியும், உற்பத்தியினை அதிகரித்துக் கொள்ளவும், பனம் பானம் பிரித்ததெடுக்கும் நேரத்தினை மிச்சப்படுத்தும் நோக்கத்துடனும் குறித்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரத்தினை பயன்படுத்தும் முறை குறித்து தேசிய இயந்தரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன ஆராய்ச்சி நிபுணர் மாலினி ரணதுங்க, மற்றும் பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவர்த்தினம் மற்றும்பனை ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.

அத்துடன், பனாட்டினை சோலர் மூலம் பதனிட்டு அதனை பாதுகாப்பாகவும் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உபகரணமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், பனை அபிவிருத்தி சபை முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X