2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'இளம் சமுதாயத்தினரிடையே பாலியல் நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றன'

Kogilavani   / 2012 நவம்பர் 30 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி, எஸ்.கே.பிரசாத்)
 
'இளம் சமுதாயத்தினரிடையே பாலியல் நோய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமையால்,  அவர்களுக்குரிய விழிப்புணர்வினை தகுந்த முறையில் வழங்குவது அவசியமாகும். மக்களிடையே பாலியல் நோய்கள் குறித்த விழிப்புணர்வுகள் அற்றுப் போய்விட்டன. இந்நோய்கள் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் பாலியல் நோய் தொற்றுக்களை குறைக்க முடியும்' என தாதிய போதானாசிரியர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியினால் விழிப்புணர்வு பேரணியும் கருத்தரங்கும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
'எச்.ஜ.வி தொற்று ஒருவருக்கு உள்ளதென்று இணங்கானப்பட்டால், அவரை தகுந்த சிகிச்சைகள் மூலம் பராமரிப்பது அவசியம்.
 
இளம் சமுதாயத்தினர் முக்கியமாக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். யாழ். மாவட்டத்தில் இளம் வயதினர் பாலியல் குற்றங்கள் புரிந்து தம்மை தாமே அழித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படும் இக்காலப்பகுதியில் இளம் சமுதாயத்தினர் தம்மை  பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

யாழ் போதானா வைத்திசாலையின் பொது வைத்திய அதிகாரி கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புனர்வு நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட தாதியர் பயிற்சிக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா,  வைத்தியர் கணேசலிங்கம், பிரதம தாதிய பரிபாலகர் சந்திர மௌலிஸ்வரன், தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபர் வல்லிபுரம், தாதிய போதனாசிரியர் சோதிமலர் உட்பட தாதிய உத்தியோகத்தர்கள், தாதிய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, எச்.ஜ.வி நோயினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .