2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஸ்ரீடெலோ காரியாலய தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது நேற்று முன்தினம் அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு - தமிழ்மிரருக்கு தெரிவித்தது.

நேற்று முன்தினம் அதிகாலை ஸ்ரீடெலோ காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்களினால் சிறிய பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை.

இந்நிலையிலேயே, இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் இன்று சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி:

ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டு வீச்சு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X