2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சுகயீன போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு இல்லை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 01 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுகயீன லீவு போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கமாட்டாது என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் இன்று தெரிவித்தனர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில்  இன்று நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில், இழந்துபோன எமது பிள்ளைகளின் கல்வியை மீட்டெடப்பதற்காகவும், அதிபர் ஆசிரியர்களினால் இழக்கப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் நாம், எமது சேவையில் எவ்வித இடையுறுகளும் எற்படுவதை விரும்பாத காரணத்தினால் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுகயீன போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர்கள்,ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து கல்வி அமைச்சுடனும், அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினரிடமும் கோரிக்கை ஒன்றை முன்வைத்த போது, அதற்கான சாதகமான முடிவினை பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்றுவரை பொறுமையுடன் காத்திருக்கின்றோம். அதனால், எந்தவொரு போராட்டத்திலும் இணைந்து அதனை குழப்ப நாம் விரும்பவில்லை என்றும் சங்கத்தினர் கூறினர்.

மேலும், எந்த அரசியல் பிண்னணியுமின்றி சேவையாற்றி வரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கடந்த கால அனர்த்தங்களின் போது உயிர்நீத்த அதிபர், ஆசிரியர்களுக்கான, இழப்பீடுகள், சொத்து இழப்பீடுகள், வழங்கப்படாத நிலுவைகள், பதவியுயர்வுகள் தொடர்பில் முரண்பாடற்ற விதத்தில் இறுக்கமான கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளதும், அவற்றை சம்பந்தப்பட்ட திணைக்களம் சாதகமாக பரிசீலனை செய்துவரும் இச்சந்தர்ப்பத்தில், எந்த விதமான போராட்டத்திலும், அதிபர், ஆசிரியர்களை இறங்க வேண்டாம் என்றும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X