2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மொஹமட் ஜெப்ரி நியமனம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
கொழும்பு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய இவர், யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்போற்றுக்கொண்டார்.

இப்பதவியில் இருந்த செ.ஸ்ரீ.குகநேசன் ஓய்வு பெற்றதன் பின்னர் இன்று இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடமைகளைக பொறுப்பேற்கும் நிகழ்வில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா உட்பட யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 7 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X