2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இளைய சமூதாயத்தின் ஜனநாயக சிந்தனையை அடக்கும் செயல்: வி.எஸ்.சிவகரன்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை இளைய சமூதாயத்தின் ஜனநாயக சிந்தனையை அடக்கும் செயல் எனவும் இவற்றை வண்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,

ஒன்றியத்தின் செயலாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமாகிய பரமலிங்கம் தர்சானந் மற்றும் ஏனைய மாணவர்களினதும் கைதானது இளைய சமூதாயத்தின் ஜனநாயக சிந்தனையை அடக்கும் செயல்.

மூன்று தசாப்தத்திற்கு மேல் இந்த நாட்டிலே பயங்கரவாதம் எனும் பெயரில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகளும், எண்ணற்ற உயிரிழப்புக்களும், ஜனநாயக விரோதங்களும் வரையறை அற்றவையாகும்.

எமது வாழ்வியல் இருப்பிற்காண கருத்துரிமைச் சுதந்திரம் அடியோடு நசுக்கப்படுகின்றது. ஜனநாயக நாடு எனும் பெயர் கொண்ட நிர்வாகத்தில் அராஜக ஆட்சியே அரங்கேற்றப்படுகின்றது.

தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்கள் எம்மை தமிழர்கள் என்றல்ல, மனிதர்கள் என்றாவது   அங்கீகரிப்பதில்லை. யுத்தம் முடிவுற்று 3 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் நலன்களில் சிறிதளவேனும் அக்கறையின்றி அடக்கி ஆழும் மேட்டடிமைத்தனத்தையே பிரயோகித்து தமிழர் வாழ்வை நிரல் படுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கையிழந்து பின் ஆயுதமேந்தலையும் அடக்கி ஒடுக்கியவர்கள் தற்போது மீண்டும் ஜனநாயக கருத்தியலுக்கு சாவு மணி அடிப்பதே இந்த சாதனை மிகு ஆசியாவின் ஆச்சரியம்.

எனவே இளைய சமூதாயத்தை வன்முறை மன நிலையை வழுவாக்கும் நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் இட்டுச் செல்கின்றனர்.

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ மேலாதிக்கத்தை சிவில் நிர்வாக அலகில் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு அவ்வப்போது புலிக்கொடி ஏற்றல்களையும், இயல்பு நிலை பாதீப்பேற்றல்களையும் அரங்கேற்ற வேண்டியது இன்றைய சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் தந்திரேபாய யுக்தியாகும்.

ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலும்,கைதுகளும்,தமிழ் மக்களின் மனங்களில் மேலும் மேலும் காயங்களை ஏற்படுத்துகின்றதாகவே அமைந்துள்ளது.

மிக நீண்ட காலமாகவே இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடையங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை நிவர்த்தி செய்ய மறந்துபோவதனாலேயே மீண்டும், மீண்டும் தமிழர்களை வன்முறையாளராக்கி அடக்கி ஒடுக்குகின்றனர்.

எதிர்காலத்திலும், இளைய சமூதாயத்தின் மீது வன்முறையை பிரயோகிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்துகின்றோம்.

எனவே அரசின் உள்நோக்கம் கொண்ட கைது என்பதால் உடனடியாக இந்த மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வழியுறுத்துகின்றோம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X