2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மாணவர்களை விடுவிக்குமாறு துணைவேந்தர் யாழ். தளபதியிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்ட வேளை மாணவன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யக் கோரியே இன்று மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மாணவர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் மாணவன் எங்கே என தாயாரிடம் விசாரித்துள்ளனர். இது தொடர்பில் தகவலறிந்த மாணவர்கள், இது தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் காவலரண்களை அகற்றுமாறும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தினர் நுழைவதையும் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X