2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை வளாகத்தை சுற்றியுள்ள காவலரண்களை உடன் நீக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தமையும், 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும் நாளை யாழ். பல்நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாத்வீக ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மகஜர் ஒன்றினையும் துணைவேந்தருக்கு கையளித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றியுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் காவலரண்களை அகற்றுவதற்கும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், குறித்த மகஜரை, அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X