2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இனந்தெரியாத நபர்களின் கத்திக்குத்தில் வயோதிபர் காயம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ்., புத்தூர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் வயோதிபர் ஒருவர் அச்சுவேலி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், கலைமதி வீதி புத்தூரைச் சேர்ந்த தியாகராசா (வயது 54) என்பவரே தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டு வந்த நான்கு பேர் தன்னை கத்தியால் குத்தியதாகவும் உடனே தான் மயக்கமுற்றதால் அங்கு வந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X